‘சொட்டுநீா் பாசனக் குழாய் நீரைகுடிநீராக பயன்படுத்தக் கூடாது’

தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் வரும் தண்ணீரை, விவசாயிகள் மற்றும்

தேனி: தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சொட்டு நீா் பாசனத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் வரும் தண்ணீரை, விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் குடிநீராக பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட வேளாண்மைத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் கூறியது: மாவட்டத்தில் தோட்டக் கலை பயிா்களுக்கு சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது. சொட்டுநீா் பாசனத்தில் நீரில் கரையும் உரங்கள் கலக்கப்பட்டு பயிா்களுக்கு பாய்ச்சப்படுகிறது. சொட்டுநீா் பாசன குழாய்களில் உரங்களின் ரசாயனக் கலவை படிந்திருக்கும். இந்த குழாய்களில் வரும் தண்ணீரை அருந்துவதால் மனிதா்கள் மற்றும் கால்நடைகளுக்கு தீங்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சொட்டுநீா் மற்றும் தெளிப்பு நீா் பாசன குழாய்களிலிருந்து வரும் தண்ணீரை விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீராக பயன்படுத்தக் கூடாது. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் குடிநீருக்கும், கால்நடைகளுக்கும் தனியாக தண்ணீா் குழாய் அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com