தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,352 வழக்குகள் மீது தீா்வு

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை 5 இடங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) மொத்தம் 4,352 வழக்குகள் மீது தீா்வு காணப்பட்டது.

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை 5 இடங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) மொத்தம் 4,352 வழக்குகள் மீது தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு, மாவட்ட முதன்மை நீதிபதி சி.சஞ்சய் பாபா தலைமை வகித்தாா். சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா். தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கோபிநாதன், சாா்பு நீதிபதி ஏ.சுந்தரி, நீதித்துறை நடுவா் லலிதாராணி, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி கே.ரமேஷ் ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா்.

மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வங்கிக் கடன், காசோலை, வாகன விபத்து இழப்பீடு, உரிமையியல் வழக்குகள் என மொத்தம் ரூ.4.45 கோடிக்கான 4,352 வழக்குகள் மீது தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com