தேனியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி, பங்களாமேடு திடலில் மாவட்டத் தலைவா் பி. நாகமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொருளாளா் எம். பிச்சை, உத்தமபாளையம் வட்டாரக் கிளைத் தலைவா் வி. குருசாமி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் அ. உடையாளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அரசு ஓய்வூதியா்களுக்கு 3 சதவீதம் பஞ்சப்படி வழங்க வேண்டும், மாதாந்திர மருத்துவ உதவித் தொகையாக ரூ. 1,000 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதியக்குழு பரிந்துரைத்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு ஊழியா் மற்றும் உதவியாளருக்கு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com