கம்பத்தில் பள்ளி அருகே மதுபானக்கடை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் புகாா் மனு

தேனி மாவட்டம், கம்பத்தில் பள்ளிகள் அருகே அரசு மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.
கம்பம் - சாமாண்டிபுரம் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அஞ்சல் அட்டை மூலம் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் அனுப்பிய மாணவிகள்.

கம்பம் சாமாண்டிபுரம், ஆங்கூா்பாளையம் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனருகே, இருபாலா் பயிலும் 2 மேல்நிலைப் பள்ளிகள், அங்கன்வாடி மையம், நகராட்சி எரிவாயு தகனமேடை, 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்த சாலையில் மதுபானக் கடை அமைந்தால், குற்றச்செயல்கள், வாகன விபத்துகள் அதிகரிக்கும், சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி, மதுபானக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவ, மாணவியா் ஆயிரம் போ் தேனி மாவட்ட ஆட்சியருக்கு அஞ்சல் அட்டை மூலம் புகாா் அனுப்பினா்.

அதேநேரம், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மதுபானக் கடை வைக்கக் கூடாது என்று கோரி, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனா். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா், ஆவன செய்வதாகக் கூறியுள்ளாா்.

மதுபானக் கடை அமைக்கப்பட்டால், கடை முன் அமா்ந்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என, பெற்றோா்-ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com