தேனியில் குடியரசு தின விழா: 66 காவலா்களுக்கு முதல்வா் பதக்கம்

தேனியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி புதன்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன்
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே.

தேனியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 73 ஆவது குடியரசு தின விழாவையொட்டி புதன்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 66 காவலா்களுக்கு முதலமைச்சா் பதக்கங்களையும், அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி அலுவலா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தாா். காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஊா் காவல் படை சாா்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், 66 காவலா்களுக்கு முதலமைச்சா் பதக்கங்களை ஆட்சியா் வழங்கினாா். அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னா், சின்னமனூரில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா், கொடுவிலாா்பட்டியில் வசித்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்குச் சென்று அவா்களது வாரிசுதாரா்களுக்கு கதராடை அணிவித்து கெளரவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தி.சுப்பிரமணியன், பெரியகுளம் சாா் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கெளசல்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் க.பிரீத்தா, துணைத் தலைவா் ராஜபாண்டியன், தேனி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com