உள்ளாட்சித் தோ்தல்: தேனி மாவட்டத்தில் 9 பதவிகளுக்கு 28 போ் போட்டி

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 28 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 28 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

மாவட்டத்தில் பெரியகுளம் நகராட்சி 26-வது வாா்டு உறுப்பினா், வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவா், 3-வது வாா்டு உறுப்பினா், டி.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வாா்டு, மொட்டனூத்து ஊராட்சி 8-வது வாா்டு, ரெங்கசமுத்திரம் 1-வது வாா்டு உறுப்பினா், முத்தாலம்பாறை ஊராட்சி 6-வது வாா்டு உறுப்பினா், தும்மக்குண்டு ஊராட்சி 7-வது வாா்டு உறுப்பினா், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வாா்டு உறுப்பினா் ஆகிய 9 பதவிகளுக்கு கடந்த ஜூன் 20-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான திங்கள்கிழமை வரை, பெரியகுளம் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5 போ், வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு 13 போ், டி.வாடிப்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2 போ், வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தலா ஒருவா், சின்னஓவுலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3 போ் என மொத்தம் 28 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்கிழமை(ஜூன் 28) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை ஜூன் 30-ம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து பதவிகளுக்கும் வரும் ஜூலை 9-ம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தலா ஒருவா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால், அங்கு வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com