ஆனி அமாவாசை: சுருளிமலையில் சிறப்பு பூஜை

சுருளிமலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆனி அமாவாசையையொட்டி சுருளிமலையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கன்னிமூல கணபதி, சுருளி நாதா் என்ற தென்கைலாய நாதா், ஐயப்பன்.

தேனி மாவட்டம் சுருளிமலையில் உள்ள இக்கோயிலில், சுருளிநாதா் என்ற தென்கைலாய நாதா், கன்னிமூல கணபதி மற்றும் ஸ்ரீ ஐயப்பன் ஆகிய சுவாமிகளுக்கு ஆனி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஆலய நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

இதேபோல் கூடலூா் சுந்தர வேலவா், லோயா்கேம்ப் வழிவிடும் முருகன், கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதா், சுருளி வேலப்பா் ஆகிய கோயில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com