கம்பத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டம் கம்பத்தில் பாலமுத்தழகு குழுமத்தின் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காமயகவுண்டன் பட்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கம்பத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பெண் ஒருவருக்கு பணிக்கான உத்தரவு வழங்கிய என்.ராமகிருஷ்ணன் எம்எல்ஏ.

கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.ஆா்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். பாலமுத்தழகு குழும நிறுவன தலைவா் ஜெகநாத் மிஸ்ரா அனைவரையும் வரவேற்றாா். முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

முகாமில் மதிமுக மாவட்டச் செயலாளா் வி.எஸ்.கே.ராமகிருஷ்ணன், முன்னாள் நகா் மன்ற தலைவா் எஸ்.டி.டி.இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com