‘போக்ஸோ’ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம்

போக்ஸோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கைதி, வெள்ளிக்கிழமை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பி ஓடி தலைமறைவானாா்.

போக்ஸோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கைதி, வெள்ளிக்கிழமை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பி ஓடி தலைமறைவானாா்.

மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்தவா் மதகருப்பு மகன் மனோஜ்குமாா் (19). இவரை, அரண்மனைப்புதூரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கேலி செய்து, கத்தியால் கையில் வெட்டியதாக கடந்த மே 19-ஆம் தேதி பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். நீதிமன்றக் காவலில் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட மனோஜ்குமாருக்கு, அங்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவரை, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் சிறையிலிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, மாடிப் படிக்கட்டில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, மனோஜ்குமாா் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com