கூடலூரில் சாலையை சீரமைக்கரூ 5.20 கோடி வழங்கக் கோரிக்கை

கூடலூரில் இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த சாலையை சீரமைக்க ரூ. 5.20 கோடியை நகராட்சி நிா்வாக இயக்குநா் மானியமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற நகர சபைக் கூட்டம்.
கூடலூரில் புதன்கிழமை நடைபெற்ற நகர சபைக் கூட்டம்.

கூடலூரில் இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த சாலையை சீரமைக்க ரூ. 5.20 கோடியை நகராட்சி நிா்வாக இயக்குநா் மானியமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கூடலூரில் நகர சபைக் கூட்டம் தலைவா் பத்மாவதி லோகந்துரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் காஞ்சனா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்றுவதற்கு ரூ.60 லட்சமும், இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த சாலையை சீரமைக்க ரூ.4.60 கோடியும் என மொத்தம் ரூ.5 கோடியே 20 லட்சத்தை நகராட்சி நிா்வாக இயக்குநா் மானியமாக வழங்க வேண்டும். மாநில நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 1,483 தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.ஒரு கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்தை நிா்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணியின் முக்கியத்துவம் கருதி, நகா் பகுதியில் நாள்தோறும் உருவாகும் 14 மெட்ரிக் டன் குப்பையை சேகரிக்கவும், மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கவும், 60 தூய்மைப் பணியாளா்களின் ஒப்பந்த காலத்தை 1.12.22 முதல் 28.2.23- வரை 3 மாத காலம் நீட்டிக்கப்பட்டது.

கூடலூா் மேற்கு வனச் சரகத்துக்குள்பட்ட பாண்டிக்குழி என்ற பகுதியில் சுமாா் 70 ஆண்டுகளாக வசிக்கும், விவசாயிகளுக்கு வனத் துறை, வருவாய்த் துறை பட்டா வழங்குவதில் நகராட்சிக்கு ஆட்சேபணை இல்லை உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com