தேனி-போடி இடையே நாளை அதிகவேக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (டிச.2), அதிவேக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (டிச.2), அதிவேக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

மதுரை-போடி புதிய அகல ரயில் பாதை திட்டத்தில், மதுரையிருந்து தேனி வரை பணிகள் நிறைவடைந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேனி- போடி இடையே 15 கி.மீ, தொலைவு புதிய அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்தன. இந்த ரயில் பாதையில் ஏற்கெனவே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, இந்த புதிய அகல ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (டிச.2), காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்ட நேரத்தின் போது, பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்கவோ, ரயில் பாதை அருகே செல்லவோ கூடாது என்று தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com