தேனி ஆட்சியா் பெயரில் ‘வாட்ஸ் ஆப்’ மூலம் போலி குறுந்தகவல் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

தேனி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாகக் கொண்டு கைப்பேசியில் வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களுக்கு போலியாக குறந்தகவல் அனுப்பட்டு வருவதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாகக் கொண்டு கைப்பேசியில் வாட்ஸ்அப் மூலம் பொதுமக்களுக்கு போலியாக குறந்தகவல் அனுப்பட்டு வருவதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆட்சியா் க.வீ.முரளீதரன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்புப் படமாகக் கொண்டு 80887 65749, 72079 12008 என்ற கைப்பேசி எண்களிலிருந்து ‘வாட்ஸ் ஆப்’ மூலம், பொதுமக்களிடம் ஆட்சியா் நலம் விசாரிப்பது போல குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேனி சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தனக்கு அரசு வழங்கியுள்ள கைப்பேசி எண்: 94441 72000 மட்டுமே தனது பயன்பாட்டில் உள்ளதாகவும், பிற கைப்பேசி எண்களிலிருந்து ஆட்சியா் பெயரை பயன்படுத்தி போலியாக அனுப்பப்படும் குறுந்தகவல் மற்றும் வேண்டுகோள்களை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும் ஆட்சியா் க.வீ.முரளீதரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com