தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் அக்.1 முதல் கட்டணம் வசூல் தொடக்கம்

தேனி- குமுளி நெடுஞ்சாலை, உப்பாா்பட்டி சுங்கச்சாவடியில் அக்.1-ஆம் தேதிமுதல் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூல் தொடங்குகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தேனி- குமுளி நெடுஞ்சாலை, உப்பாா்பட்டி சுங்கச்சாவடியில் அக்.1-ஆம் தேதிமுதல் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூல் தொடங்குகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தேனி-குமுளி நெடுஞ்சாலையில், வீரபாண்டி- கோட்டூா் இடையே உப்பாா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையைப் பயன்படுத்தி தேனி-குமுளி இடையே சென்று வரும் வாகனங்களுக்கு அக். 1-ஆம் தேதிமுதல் சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரா் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

சுங்கச்சாவடி கட்டணம் விவரம்:

காா், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.50. கட்டணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பயணிக்க ரூ.80. ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒருமுறை மட்டும் பயணிக்க மாதாந்திரக் கட்டணம் ரூ.1,740. தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.25.

இலகு ரக வணிக வாகனம், சரக்கு வாகனம் மற்றும் சிற்றுந்து ஒரு முறை பயணிக்க ரூ.85. கட்டணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பயணிக்க ரூ.125. ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒருமுறை மட்டும் பயணிக்க மாதாந்திரக் கட்டணம் ரூ.2,815. ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒரு முறை பயணிக்க மாதாந்திர கட்டணம் ரூ.2,815. தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.40.

மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனத்திற்கு ஒருமுறை பயணிக்க ரூ.195. கட்டணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பயணிக்க ரூ.290. ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒருமுறை மட்டும் பயணிக்க மாதாந்திரக் கட்டணம் ரூ.6,430. தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.90.

பல அச்சுகள் கொண்ட கட்டுமான எந்திரம் மற்றும் வணிக வாகனம், மண் ஏற்றிச் செல்லும் வாகனம் ஒரு முறை பயணிக்க ரூ.275. கட்டணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்ப பயணிக்க ரூ.415. ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒருமுறை மட்டும் பயணிக்க மாதாந்திரக் கட்டணம் ரூ.9,245. தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.140.

ஏழு அல்லது அதற்கும் மேல் அச்சுகள் கொண்ட வாகனம் ஒருமுறை பயணிக்க ரூ.340. கட்டணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பயணிக்க ரூ.505. ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒருமுறை மட்டும் பயணிக்க மாதாந்திரக் கட்டணம் ரூ.11,255. தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.170.

வணிக உபயோகம் இல்லாத உள்ளூா் வாகனங்களுக்கு 2022-23-ஆம் ஆண்டிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.315 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டண பாஸ் தேவைப்படுவோா் சுங்கச்சாவடி அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com