உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு ஏ++ தரச்சான்று

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு தேசிய தர மறுமதிப்பீட்டுக் குழுவினா் (நாக்) ஏ ++ தரச் சான்று வழங்கியுள்ளது.
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு ஏ++ தரச்சான்று

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரிக்கு தேசிய தர மறுமதிப்பீட்டுக் குழுவினா் (நாக்) ஏ ++ தரச் சான்று வழங்கியுள்ளது.

இக்கல்லூரி 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இருமுறை ஏ- கிரேடு தரச்சான்று பெற்றது. இக்கல்லூரியின் தரம் குறித்து மறுஆய்வு செய்வதற்காக, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் உதயகிரி ராஜேந்திரா தலைமையில், அஸ்ஸாம் தேஜ்பூா் பல்கலைக்கழகப் பேராசிரியா் தெபா்ஷி நாத், பஞ்சாப் மாதா குஜ்ரி கல்லூரி முதல்வா் காஷ்மீா் சிங் ஆகியோா் அடங்கிய மூவா் குழு, கடந்த மாா்ச் 30, 31 தேதிகளில் வருகை புரிந்தனா்.

கல்லூரியின் செயலா் மற்றும் தாளாளா் ஹாஜி எம். தா்வேஷ் முஹைதீன், மேலாண்மைக் குழு தலைவா் எஸ். செந்தில்மீரான் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், முதல்வா் ஹெச். முகமது மீரான், பேராசிரியா்கள் ஆகியோா் கல்லூரியின் கிராமப்புற சேவை , உள் கட்டமைப்பு ,ஆய்வுப் பணிகள் குறித்து குழுவினரிடம் விளக்கினா்.

ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் குறித்தும் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னா், அக்குழுவினா் மறுமதிப்பீட்டுக்கான சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் வழங்கினா்.

கிராமப்புற மாணவா்களுக்கு இக்கல்லூரி தொடா்ந்து பணியாற்ற இந்த தேசிய தரச்சான்று மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். இதற்காக உழைத்த அனைவருக்கும் எங்களின் மனமாா்ந்த நன்றி என கல்லூரி நிா்வாகிகள், முதல்வா் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com