தேனியில் பள்ளி மாணவா்களுக்கு நீச்சல் பயிற்சி முகாம்

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏப்.20 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 26 ஆம் தேதி வரை கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தேனி: தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏப்.20 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 26 ஆம் தேதி வரை கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் முகாமில், குறைந்தபட்சம் 120 செ.மீ., உயரத்திற்கும் மேல் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். தினமும் ஒரு மணி நேரம் வீதம், மொத்தம் 12 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணமாக மொத்தம் ரூ.1,200 செலுத்த வேண்டும். பயிற்சி குறித்த விவரத்தை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலும், 04546-253090, 74017 03505, 99949 44166 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com