இடுக்கி செருதோனி அணை நாளை திறப்பு

தேனி மாவட்டம், அருகே உள்ள இடுக்கி செருதோனி அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று அணையை நிர்வகிக்கும் கேரள மாநில மின்சார வாரியத்தினர் தெரிவித்தனர்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தேனி மாவட்டம், அருகே உள்ள இடுக்கி செருதோனி அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று அணையை நிர்வகிக்கும் கேரள மாநில மின்சார வாரியத்தினர் தெரிவித்தனர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை ரூல் கர்வ் நடைமுறை படி முல்லைப் பெரியாறு அணையில் உபரி நீர் இடுக்கி அணைக்கு திறக்கப்பட்டு, விநாடிக்கு 2,238 கன அடி தண்ணீர் செல்கிறது.

இந்நிலையில் இடுக்கி வளைவு அணையின் தண்ணீர் திறப்பு அணையான செருதோனி அணையின் மொத்த நீர் மட்டம், 2,403 அடி உயரமாகவும், ரூல் கர்வ் விதிப்படி 2,375 அடி உயரமாகும், 2,381.52  அடி உயரத்தை எட்டியவுடன் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், விடப்பட்டது. ஆனால் சனிக்கிழமை நிலவரப்படி, 2,381.52 அடி உயரத்தை அடைந்தது, இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் சிவப்பு நிற எச்சரிக்கையை அறிவித்தது.

மேலும் அணை பொறியாளர்கள் கூறியது, வெள்ளிக்கிழமை முல்லைப் பெரியாறு அணை உபரி நீர், 10 மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டு இடுக்கி அணைக்கு வரும் நிலையில் இடுக்கி அணை பலமாகவே  உள்ளது. செருதோனி அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்படும், விநாடிக்கு,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com