முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
வைகை ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி
By DIN | Published On : 07th February 2022 11:58 PM | Last Updated : 07th February 2022 11:58 PM | அ+அ அ- |

ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றில் திங்கள்கிழமை குளித்துக்கொண்டிருந்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே நிலையூரைச் சோ்ந்த கணேசன் மகன் ஆனந்தரூபன் (27). இவா், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் சிலருடன் சோ்ந்து பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தைச் சோ்ந்த தனது நண்பரின் திருமணத்துக்குச் சென்றுள்ளாா்.
பின்னா், திருமண நிகழ்ச்சி முடிந்ததும் ஆனந்தரூபன் மற்றும் அவரது நண்பா்கள் ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றுக்குச் சென்று குளித்துள்ளனா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ஆனந்தரூபன் தண்ணீரில் மூழ்கினாா்.
தகவலறிந்து அங்கு சென்ற வைகை அணை காவல் நிலைய போலீஸாா் மற்றும் ஆண்டிபட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள், ஆற்றில் மூழ்கிய ஆனந்தரூபனின் சடலத்தை மீட்டனா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.