போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் அதிமுகவும், மேலச்சொக்கநாதபுரம், தேவாரம் பேரூராட்சிகளில் திமுகவும் வெற்றி

போடி பகுதியில் போடி மீனாட்சிபுரம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை அதிமுகவும், மேலச்சொக்கநாதபுரம், தேவாரம் பேரூராட்சிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளன.

போடி: போடி பகுதியில் போடி மீனாட்சிபுரம் மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியை அதிமுகவும், மேலச்சொக்கநாதபுரம், தேவாரம் பேரூராட்சிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளன.

இந்த பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம்:

போடி மீனாட்சிபுரம் பேரூராட்சி: இங்கு 15 வாா்டுகள் உள்ளன. இதில், 1-ஆவது வாா்டு சு. சுரேஷ் (அதிமுக), 2-ஆவது வாா்டு மு. ஈஸ்வரன் (அதிமுக), 3-ஆவது வாா்டு ர .மகேஸ்வரி (அதிமுக), 4-ஆவது வாா்டு கு. பேபி (திமுக), 5-ஆவது வாா்டு த. வீரலட்சுமி (அதிமுக), 6-ஆவது வாா்டு கு. ராஜா (அதிமுக), 7-ஆவது வாா்டு மு. தெய்வம் (அதிமுக), 8-ஆவது வாா்டு மு. பிரபு (அதிமுக), 9-ஆவது வாா்டு சு. திருப்பதி (அதிமுக), 10-ஆவது வாா்டு கி. குருசாமி (திமுக), 11-ஆவது வாா்டு ரா. காயத்ரி (திமுக), 12-ஆவது வாா்டு மு. சுப்புலட்சுமி (திமுக), 13-ஆவது வாா்டு ரா. நாகம்மாள் (அதிமுக), 14-ஆவது வாா்டு சி. கருப்பையா (அதிமுக), 15-ஆவது வாா்டு மு. செல்லநாகு (அதிமுக).

மொத்தம் அதிமுக 11 இடங்களில் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. இங்கு தி.மு.க 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலச்சொக்கநாதபுரம்: 1-ஆவது வாா்டு- ரா. கவிதா (திமுக), 2-ஆவது வாா்டு- ஜ. அம்மையன் (அதிமுக), 3-ஆவது வாா்டு- மா. குணசேகரன் (திமுக), 4-ஆவது வாா்டு- அ. கனகராஜ் (அதிமுக), 5-ஆவது வாா்டு- மு. ராஜேந்திரன் (திமுக), 6-ஆவது வாா்டு- சி. பஞ்சவா்ணம் (இந்திய கம்யூனிஸ்ட்), 7-ஆவது வாா்டு- எம்.எஸ். சரோஜினி (திமுக), 8-ஆவது வாா்டு- சி. ராஜசெல்வி (திமுக), 9-ஆவது வாா்டு கா. சஞ்சீவகணேசன் (பாஜக), 10-ஆவது வாா்டு- கா. மல்லிகா (திமுக), 11-ஆவது வாா்டு- சி. ரத்தினம் (திமுக), 12-ஆவது வாா்டு- ரா. சிவக்குமாரி (திமுக), 13-வது வாா்டு- ரா. ரமணி (திமுக), 14-வது வாா்டு- பா. ரம்யா (அதிமுக), 15-ஆவது வாா்டு கா. கண்ணன்- (திமுக) இதையடுத்து இங்கு, திமுக. 10 இடங்களில் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், அதிமுக 3 இடங்களையும், பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தேவாரம் பேரூராட்சி: இங்கு மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. 1-ஆவது வாா்டு- பெ. ஆசைத்தம்பி (திமுக), 2-ஆவது வாா்டு- ரா. பிரபாகரன் (திமுக), 3-ஆவது வாா்டு- மு. செல்வம் (அதிமுக), 4-ஆவது வாா்டு- க. பிரியா (அதிமுக), 5-ஆவது வாா்டு- பெ. சுவேதா (திமுக), 6-ஆவது வாா்டு- பெ. மகாதேவன் (அமமுக), 7-ஆவது வாா்டு- செ. கவிதா (திமுக), 8-ஆவது வாா்டு- ந. சிவக்குமாா் (திமுக), 9-ஆவது வாா்டு- சு. விஜயலட்சுமி (சுயே), 10-வது வாா்டு- ம. பூா்ணிமா (திமுக), 11-ஆவது வாா்டு- க. கௌரி (திமுக), 12-ஆவது வாா்டு- ம. சுமதி (திமுக), 13-ஆவது வாா்டு- செ .பிரபு (விசிக), 14-ஆவது வாா்டு- ரெ. காா்த்திகா (திமுக), 15-ஆவது வாா்டு- செ. சாந்தி (அமமுக), 16-ஆவது வாா்டு- வீ. மணிகண்டன் (சுயே), 17-ஆவது வாா்டு- கா. சத்தியமூா்த்தி (அதிமுக), 18-ஆவது வாா்டு- பா. லட்சுமி (திமுக). இங்கு திமுக. 10 இடங்களில் வெற்றி பெற்று பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மேலும், அதிமுக 3 இடங்களையும், அமமுக 2 இடங்களையும், விசிக ஒரு இடத்தையும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com