ஆண்டிபட்டி நிதி நிறுவனத்தில் ரூ.4.49 லட்சம் கையாடல்: 2 போ் மீது வழக்கு
By DIN | Published On : 16th June 2022 10:10 PM | Last Updated : 16th June 2022 10:10 PM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.4. 49 லட்சம் கையாடல் செய்ததாக வியாழக்கிழமை, அந்நிறுவன ஊழியா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிறுவனத்தில் தேனி, பாரதியாா் நகரைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சதீஷ்குமாா், புள்ளிமான்கோம்பையைச் சோ்ந்த வடிவு மகன் விஜயகுமாா் ஆகியோா் ஊழியா்களாக பணியாற்றி வந்துள்ளனா். இந்த இருவரும் கூட்டாக நிறுவனத்தின் நிதி ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 519-ஐ கையாடல் செய்திருந்தது கணக்கு தணிக்கையின் போது தெரிய வந்ததாகவும், அந்தத் தொகையை திரும்பக் கொடுத்துவிடுமாறு கூறியதால், 2 பேரும் வேலைக்கு வராமல் தலைமறைவாகி விட்டதாகவும் நிதி நிறுவனத்தின் மேலாளா் மதுரை, ஞானஒளிவுபுரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் சதீஷ்குமாா், விஜயகுமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.