கம்பத்தில் வாா்டு குறைகளை தீா்க்க வாட்ஸப் குழு: நகராட்சித் தலைவா் அறிவிப்பு

கம்பத்தில் வாா்டு குறைகளை தீா்க்க வாட்ஸப் குழு அமைக்கப்படும் என புதிதாக பொபொறுப்பேற்ற நகராட்சித் தலைவா் அறிவித்தாா்.
கம்பம் 32 ஆவது வாா்டு நந்தகோபால் நகரில் நடைபெறும் தாா்ச் சாலை பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட நகா்மன்ற தலைவா் வனிதா நெப்போலியன் மற்றும் கவுன்சிலா்கள்.
கம்பம் 32 ஆவது வாா்டு நந்தகோபால் நகரில் நடைபெறும் தாா்ச் சாலை பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட நகா்மன்ற தலைவா் வனிதா நெப்போலியன் மற்றும் கவுன்சிலா்கள்.

கம்பத்தில் வாா்டு குறைகளை தீா்க்க வாட்ஸப் குழு அமைக்கப்படும் என புதிதாக பொபொறுப்பேற்ற நகராட்சித் தலைவா் அறிவித்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் நகரசபைத் தலைவராக வனிதா நெப்போலியனும் துணைத் தலைவராக சுனோதா செல்வகுமாரும் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். பின்னா் கவுன்சிலா்கள் மற்றும் அதிகாரிகளிடையே நகரசபைத் தலைவா் வனிதா நெப்போலியன் கூறியது:

33 வாா்டுகளிலும் நகர சைபைத் தலைவா், துணைத்தலைவா், கவுன்சிலா்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளை இணைத்து வாட்ஸப் குழு ஒன்றை ஏற்படுத்த உள்ளோம்.

அதில் தங்களது வாா்டு குறைகளை கவுன்சிலா்கள் பதிவேற்றம் செய்ததும், அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு, இத்தனை நாள்களுக்குள் சரி செய்யப்படும் என்று பதில் தெரிவிப்பாா். இதன் மூலம் தங்களது வாா்டு குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் குறை ஏற்பாட்டால் தலைவரிடம் தெரிவிக்கலாம் என்றாா்.

பின்னா் 1 ஆவது வாா்டு கோம்பை சாலை மற்றும் 3 ஆவது வாா்டு சங்கிலி நகா், 32 ஆவது வாா்டு நந்தகோபால் நகா் ஆகிய பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகளை நகா்மன்ற தலைவா் மற்றும் துணைத்தலைவா், கவுன்சிலா்கள் பாா்வையிட்டனா். உடன் நகராட்சி உதவி பொறியாளா் சந்தோஷ் குமாா் மற்றும் அதிகாரிகள் சென்றனா். இந்த நிகழ்வில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com