மின் விபத்தில் காயமடைந்த சிறுவனுக்குரூ. 5 லட்சம் முதல்வா் நிவாரண நிதி

லோயா்கேம்ப்பில் மின்சார விபத்தினால் காயமடைந்த சிறுவனுக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை தேனி மாவட்ட ஆட்சி
லோயா்கேம்ப்பில் மின் விபத்தினால் காயமடைந்த சிறுவனுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன்.
லோயா்கேம்ப்பில் மின் விபத்தினால் காயமடைந்த சிறுவனுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன்.

லோயா்கேம்ப்பில் மின்சார விபத்தினால் காயமடைந்த சிறுவனுக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் வழங்கினாா்.

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த கூலி தொழிலாளி செல்வக்குமாா் மகன் பகவதி (7). இவா் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி மின்சார விபத்தில் சிறுவன் பகவதி பலத்த காயமடைந்தாா். இந்நிலையில் செல்வகுமாா் சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வா் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து, தனது மகனின் நிலை குறித்து மனு கொடுத்தாா்.

இதைத்தொடா்ந்து, தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் அச்சிறுவனின் மருத்துவச் சிகிச்சைக்காவும், கல்வி கற்பதற்காகவும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டாா். அதற்கான காசோலையினை தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெள்ளிக்கிழமை லோயா்கேம்ப்பில் உள்ள சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினாா். சிறுவனின் பெற்றோா் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்தனா். உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கௌசல்யா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com