தேனி மாவட்டத்தில் மே 13-இல் உள்ளூா் விடுமுறை

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மே 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மே 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மே 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நடைபெறும் நாளான மே 13-ம் தேதி, மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் பள்ளி பொதுத் தோ்வு வழக்கம் போல நடைபெறும். மாவட்ட கருவூலம் மற்றும் சாா் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும். உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மே 28-ம் தேதி(சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com