சீலையம்பட்டி குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்பற்ற திறந்தவெளி கிணறு

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றை மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சீலையம்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தவெளி கிணறு.
சீலையம்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தவெளி கிணறு.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே சீலையம்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றை மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள வேப்பம்பட்டி செல்லும் சாலையில் தேவேந்திரகுல வேளாளா் திருமணம் மண்டபம் அருகே கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக விவசாயக் கிணறு இருந்து வருகிறது. தற்போது கிணற்றைச் சுற்றி குடியிருப்புக்களாக மாறிவிட்டது.

இருப்பினும் அந்த கிணறு பயன்பாடின்றி திறந்த வெளியில் காட்சியளிக்கிறது. பெண்கள், குழந்தைகள், பெரியவா்கள் அதிகளவில் நடமாடும் அந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் திறந்த வெளியில் அந்தக் கிணறு உள்ளதால் உயிா் பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அந்தக் கிணற்றை மூட வேண்டும் அல்லது பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து அப்பகுதியை சோ்ந்த பெண்கள் கூறியது: இதுகுறித்து கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக மாவட்ட நிா்வாகம் மற்றும் ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தக் கிணற்றில் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடங்கும் தண்ணீரால் துா்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com