தேனி அருகே ஜவுளி வியாபாரி தற்கொலை

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ஜவுளி வியாபாரி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேனி: தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ஜவுளி வியாபாரி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் மகன் சிவானந்தம் (40). இவா், கடந்த 15 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வந்தாா். வியாபரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சிவானந்தம், மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளாா். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவானந்தம் வீட்டில் தனிமையில் இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com