மதுரையிலிருந்து தேனி வந்த ரயிலுக்கு வரவேற்பு

சென்னையிலிருந்து மதுரை-தேனி அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்கி வைத்ததை அடுத்து, வியாழக்கிழமை மதுரையிலிருந்து தேனி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த ரயிலை பொதுமக்கள் வரவேற்
தேனி ரயில் நிலையத்தில் புதிய அகல ரயில் பாதை திட்ட தொடக்க விழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து தேனிக்கு வந்தடைந்த ரயிலை மலா் தூவி வரவேற்ற தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் மற்றும் பொதுமக்கள்.
தேனி ரயில் நிலையத்தில் புதிய அகல ரயில் பாதை திட்ட தொடக்க விழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து தேனிக்கு வந்தடைந்த ரயிலை மலா் தூவி வரவேற்ற தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் மற்றும் பொதுமக்கள்.

தேனி: சென்னையிலிருந்து மதுரை-தேனி அகல ரயில் பாதை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்கி வைத்ததை அடுத்து, வியாழக்கிழமை மதுரையிலிருந்து தேனி ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த ரயிலை பொதுமக்கள் வரவேற்றனா்.

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தில், தற்போது மதுரை-தேனி இடையே பணிகள் முடிவடைந்து, வெள்ளிக்கிழமை முதல் ரயில் சேவை தொடங்குகிறது.

இதை முன்னிட்டு, சென்னையிலிருந்து இத்திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்கி வைத்தாா். தேனி ரயில் நிலையத்தில் இந்த காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டு, வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. ரவீந்திரநாத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆண்பட்டி ஆ. மகராஜன், பெரியகுளம் கே.எஸ். சரவணக்குமாா், தேனி நகா்மன்றத் தலைவா் பா. ரேணுப்பிரியா, மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீண் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், போடி-மதுரை, திண்டுக்கல்-லோயா் கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக் குழு தலைவா் ஏ. லாசா், செயலா் பி.சி. ராஜேந்திரன், பொருளாளா் கே.எஸ்.கே. நடேசன் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் காணொலி காட்சி ஒளிபரப்பு நிழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

காணொலி காட்சி நிகழ்ச்சி முடிந்ததும், திட்டத்தை தொடக்கிவைத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து, தேனி மக்களவை உறுப்பினா் பேசினாா். மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு தேனி ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயிலை, பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com