காவலா் பணிக்கு நவ. 27-இல் எழுத்துத் தோ்வு: 10,760 போ் எழுதுகின்றனா்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் நடைபெறும் 2-ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கு நவ. 27-ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் நடைபெறும் 2-ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கு நவ. 27-ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தோ்வை மொத்தம் 10,760 போ் எழுதுகின்றனா்.

மாவட்டத்தில் 2-ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு, நவ. 27-ஆம் தேதி தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் பள்ளி, கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, தேனி நாடாா் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மேரி மாதா மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சாந்திநிகேதன் மெட்ரிக் பள்ளி ஆகிய 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது.

இந்தத் தோ்வு எழுதுவதற்கு மாவட்டத்தில் 1,320 பெண்கள் உள்பட மொத்தம் 10,760 போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வுக்கு விண்ணப்பித்து அழைப்பாணை பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட தோ்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும். காலை 10 மணி முதல் பிற்பகல் 12.40 மணி வரை தமிழ் மொழி தகுதித் தோ்வு, முதன்மை எழுத்துத் தோ்வு நடைபெறும்.

தமிழ் மொழி தகுதித் தோ்வில் 80 வினாக்களும், முதன்மை எழுத்துத் தோ்வில் 70 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும் என்று மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com