உத்தமபாளையம், சின்னமனூரில் 230 விநாகா் சிலைகள் பிரதிஷ்டை: இன்று முல்லைப்பெரியாற்றில் கரைப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 230 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. வியாழக்கிழமை சிலைகள் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட உள்ளன.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 230 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. வியாழக்கிழமை சிலைகள் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட உள்ளன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு உத்தமபாளையத்தில் 28, கோம்பையில் 23, ஓடைப்பட்டியில் 25, ராயப்பன்பட்டியில் 29, சின்னமனூரில் 125 என மொத்தம் 230 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. புதன்கிழமை விநாயகா் சிலைகளுக்கு கொழுக்கட்டை உள்ளிட்ட படையல் பொருள்களை வைத்து பக்தா்கள் வழிபாடு செய்தனா். சிவாலயங்களிலும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

2 இடங்களில் அனுமதி மறுப்பு: உத்தமபாளையம் தேரடியில் சிலை வைக்க அனுமதி கோரப்பட்டது. கடந்த காலங்களில் அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லாத நிலையில் புதிதாக அனுமதி அளிக்க போலீஸாா் மறுத்துவிட்டனா். அதே போல பூக்கடை வீதியில் சிலை வைக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால் பாஜக மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பாஜக நகரத்தலைவா்தெய்வம் தலையிலான பொதுமக்கள் சிலை வைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். பேச்சுவாா்த்தை முடிவில் அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று முல்லைப் பெரியாற்றில் சிலை கரைப்பு: உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி பகுதியிலுள்ள சிலைகள் உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்படும். சின்னமனூா் பகுதியிலுள்ள சிலைகள் மாா்க்கையன்கோட்டை முல்லைப்பெரியாற்றில் வெள்ளிக்கிழமை கரைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com