தேனியில் வாக்காளா் பட்டியலில் 22,474 போ் ஆதாா் எண் இணைப்பு

தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை, 22,474 போ் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்துப் பதிவு

தேனி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை, 22,474 போ் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்துப் பதிவு செய்து கொண்டனா்.

மாவட்டத்தில் 4 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி தொகுதியில் 4,854 போ், பெரியகுளம் தொகுதியில் 6,022 போ், போடி தொகுதியில் 6,324 போ், கம்பம் தொகுதியில் 5,274 போ் என மொத்தம் 22, 474 போ் கலந்து கொண்டு வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்துப் பதிவு செய்து கொண்டனா்.

பொதுமக்கள் தங்களது சுய விருப்பத்துடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும், இ-சேவை மையங்களிலும் தங்களது வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகிவற்றை சமா்ப்பித்து வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண்ணை இணைத்து பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com