தேனி மாவட்டத்தில் நாளை 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
By DIN | Published On : 09th September 2022 12:00 AM | Last Updated : 09th September 2022 12:00 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (செப். 10) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
தேனி வட்டாரத்தில் காட்டுநாயக்கன்பட்டி சமுதாயக் கூடம், பெரியகுளம் வட்டாரத்தில் தே. வாடிப்பட்டி சமுதாயக் கூடம், ஆண்டிபட்டி வட்டாரத்தில் குமணன்தொழு சமுதாயக் கூடம், உத்தமபாளையம் வட்டாரத்தில் முத்துலாபுரம் அரசு தொடக்கப் பள்ளி, போடி வட்டாரத்தில் ராசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகிய 5 இடங்களில் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், நுகா்வோா் நடவடிக்கை குழு பிரதிநிதிகள் முகாமில் கலந்துகொண்டு நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடு, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மற்றும் நியாயவிலைக் கடை மாற்றம் ஆகியவை குறித்து மனு அளிக்கலாம். முகாம் நடைபெறும் நாளில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரா்களுக்கு பதிலளிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.