மாநில கல்விக் கொள்கை:செப். 20-க்குள் கருத்து தெரிவிக்கலாம்

தேனி மாவட்டத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா், கல்வியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் செப். 20-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்

தேனி மாவட்டத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா், கல்வியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் செப். 20-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாநிலத்திற்கு தனித்துவமான கல்விக் கொள்கை வகுப்பதற்கு நீதியரசா் த. முருகேசன் தலைமையில் உயா்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. செப். 21-ஆம் தேதி நடைபெற உள்ள உயா்மட்டக் குழு கூட்டத்தில், தேனி மாவட்டம் சாா்பில் மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கள் சமா்ப்பிக்கப்பட உள்ளன.

எனவே, மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா், கல்வியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மாநில கல்விக் கொள்கை தொடா்பான பல்வேறு காரணிகள் குறித்த தங்களது கருத்துக்களை மின்னஞ்சல் முகவரி மூலம் செப். 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com