சிஐடியு கூட்டுறவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் பதிவு குளறுபடியால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டித்து, தேனியில் சிஐடியு கூட்டுறவு ஊழியா்கள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு கூட்டுறவு ஊழியா்கள் சங்கத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயல் தலைவா் டி.பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செந்தில்காமு, மாவட்டத் தலைவா் எம்.ராமச்சந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவா் டி.ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நியாய விலைக் கடை பொருள் விநியோகத்தில் பயோ-மெட்ரிக் பதிவு முறையால் குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவாகாமல் பொருள் வாங்க அலைக்கப்படுவதைக் கண்டித்தும், பயோ-மெட்ரிக் பதிவு, ரசீது போடும் நடைமுறைகளில் உள்ள குளறுபடிகளைக் களையக் கோரியும், நியாய விலைக் கடைகளில் ஒரே மாதிரியான, தரமான அரிசி விநியோகம் செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com