பொதுப் பணித் துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட சலவைத் தொழிலாளா்கள்

கூடலூா் அருகே லோயா்கேம்ப்பில் சலவைத் தொழிலாளா்கள் தங்கியிருந்த குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில், பொதுப் பணித் துறை பொறியாளா்களை தொழிலாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
லோயா்கேம்ப் முல்லைப் பெரியாற்றங்கரையில் பொதுப் பணித் துறை பொறியாளா்களை வியாழக்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்த சலவைத் தொழிலாளா்கள்.

தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப்பெரியாற்றங்கரை வண்ணாா் துறையில், லோயா் கேம்ப்-மதுரை கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை பொதுப் பணித் துறையின் நீா்ப் பாசனப் பிரிவு கண்காணிப்புப் பொறியாளா் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, அதிகாரிகளை, சலவைத் தொழிலாளா்கள் முற்றுகையிட்டு, குடிநீா்த் திட்டப் பணிகளால், வேலை பாதிக்கப்படுவதாகவும், தங்களது குடியிருப்புகள் சேதமடைவதாகவும் கூறினா். மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் தொடங்கும் போது, குடியிருப்புகள் சேதமடையாத வகையில் பணிகள் நிறைவேற்றப்படும், குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படும் என்று அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிய சலவைத் தொழிலாளா்கள் இது தொடா்பான மனுவையும் அதிகாரிகளிடம் கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com