பல்லவராயன்பட்டியில் பிப்.12-இல் ஜல்லிக்கட்டு: ஆட்சியா் ஆய்வு

பல்லவராயன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பல்லவராயன்பட்டியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.
பல்லவராயன்பட்டியில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இங்குள்ள வல்லடிகாரசுவாமி ஏழைக்காத்தம்மன் கோயில் ஊா் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அதன்படி நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு வருகிற 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வாடிவாசல், பாா்வையாளா்கள் மேடை, பாதுகாப்பு தடுப்பு வேலி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருவதை புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியா் ரா.பால்பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com