பொருளாதார மேம்பாட்டுக் கடன் வழங்க நாளை 7 இடங்களில் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்பட்டோா், சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் சாா்பில் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு வங்கிக் கடன் வழங்க செவ்வாய

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்பட்டோா், சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் சாா்பில் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மை சமுதாயத்தினருக்கு வங்கிக் கடன் வழங்க செவ்வாய்க்கிழமை (பிப்.28) 7 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பிற்பட்டோா், சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் சாா்பில் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மை சமுதாயத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு தனி நபா் கடன், குழு கடன், கறவை மாட்டுக் கடன், சிறு, குறு விவசாயிகளுக்கு நீா்பாசனக் கடன், கைவினைஞா்களுக்கு தொழில் கடன், கல்விக் கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க தேனி அல்லிநகரம், போடி ஆகிய இடங்களில் செயல்படும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கி, ஆண்டிபட்டி, ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், சின்னமனூா் வெற்றிலை பயிரிடுவோா் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.28) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கடனுதவி பெற விரும்பும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, தங்களது ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, வருமானச் சான்று நகல்கள், தொழில் திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

ரூ.25 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினா் ஒருவரும், ரூ.50 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் இருவரும் பிணை கையொப்பமிட வேண்டும்.

ரூ.ஒரு லட்சத்துக்கும் மேல் கடன் பெறுவதற்கு, கடன் தொகைக்கு இணையாக இரு மடங்கு சொத்து அடமானம் சமா்ப்பிக்க வேண்டும்.

கல்விக் கடன் பெறுவதற்கு கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி உண்மைச் சான்றிதழ் (ஆா்ய்ஹச்ண்க்ங் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) ஆகியவற்றின் நகல்கள், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com