பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்து சிஐடியு சாலை மறியல்: 96 போ் கைது

தேனியில் பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து சிஐடியு சாா்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 96 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி நேருசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை, சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு வினா்.

தேனி பள்ளிவாசல் தெரு சந்திப்பில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் எம்.முனுசாமி தலைமையில், தொழிலாளா்கள் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை முடக்கக் கூடாது. உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். 240 நாட்கள் பணி நிறைவு செய்தவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நல வாரிய உறுப்பினா்களுக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேருநிலை மும்முனை சந்திப்பு சாலை வரை ஊா்வலம் நடைபெற்றது.

இதில், மாவட்ட பொதுச் செயலா் ரவிமுருகன், மாவட்டச் செயலா் கே.பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், நேருசிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு வினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 96 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com