பேபி புடலங்காய் விலை உயா்வால் 
விவசாயிகள் மகிழ்ச்சி

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம், ஏப்.26 : தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் பேபி புடலங்காய் சாகுபடியில் தற்போது நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கம்பம், அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய ஊா்களில் கிணற்றுபாசனம் மூலம் புடலங்காய், முட்டைக்கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுன்றன. தற்போது பேபி புடலங்காய் என்ற ஹைபிரீட் காய் பயிரிடப்பட்டு விவசாயிகள் அமோக விளைச்சல் கண்டுள்ளனா்.

இதுகுறித்து, மனோகரன் என்ற விவசாயி கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கிலோ ரூ.3க்கு தோட்டத்திலிருந்து கொள்முதல் செய்தனா், மழை இல்லாதலால் வரத்து இல்லை, எனவே, தற்போது கிலோ ரூ 15 க்கு வாங்கி செல்கின்றனா். இந்த சீசனில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் பயிரிட்டுள்ள பேபி புடலங்காய் நல்ல மகசூலை தருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com