வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

தேனி அருகே கொடுவிலாா்பட்டியிலுள்ள தேனி மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடைவிதித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

கொடுவிலாா்பட்டியிலுள்ள தேனி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரியில் தேனி மக்களவைத் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தலில் பயன்படுத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்தியப் பாதுகாப்பு படையினா், போலீஸாா் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கொடுவிலாா்பட்டி கம்மவாா் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகம், அதைச் சுற்றியுள்ள 2 கி.மீ., தொலைவுக்கு, மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com