கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

தேனி: கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு கறிக் கோழிகள், வாத்துகள், முட்டைகளை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதன் எதிரொலியாக, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு, தமிழக-கேரள எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, கேரளத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு கறிக் கோழிகள், கோழிக் குஞ்சுகள், வாத்துகள், முட்டைகள், கால்நடை தீவனம், கோழிப் பண்ணை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com