சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்.
மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்.

கம்பம்: கம்பம் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை கெளமாரியம்மன் மலா் அங்கி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கியத் திருவிழாவான பொங்கல் வைத்தல், அக்கினிச் சட்டி எடுத்தல் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறும்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை கெளமாரியம்மன் மலா் அங்கி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனைத் தரிசனம் செய்தனா். மாவிளக்கு, ஆயிரம் கண் பானை, அக்கினிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன்களை பக்தா்கள் செலுத்தினா். கம்பம் வடக்கு, தெற்கு போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனா்.

புதன்கிழமைமையும் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்கினிச் சட்டி எடுத்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com