போடி அருகே அம்பரப்பா் மலையை ஒட்டிய பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத் தீ.
போடி அருகே அம்பரப்பா் மலையை ஒட்டிய பகுதிகளில் எரிந்து வரும் காட்டுத் தீ.

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

போடி: போடி அருகே அம்பரப்பா் மலையை ஒட்டிய வனப் பகுதியில் காட்டுத் தீ வேகமாகப் பரவி எரிந்து வருகிறது.

தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசுகிறது. இதனால், போடியை அடுத்த நியூட்ரினோ கிராமமான பொட்டிப்புரம் அம்பரப்பா் மலை, ஒண்டிவீரப்பன் மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் காட்டுத் தீப் பரவி எரியத் தொடங்கியது.

திங்கள்கிழமை பகலில் தொடங்கி, இரவு முழுவதும் தீப் பற்றி எரிந்து வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் செடி, கொடிகள், மூலிகைத் தாவரங்கள், கால்நடை தீவனச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. அனல் காற்று வீசுவதால், தீ வேகமாக எரிந்து வருகிறது. மேலும், மலைப் பகுதியில் உள்ள வன விலங்குகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கும் வன விலங்குகள் இடம் பெயரும் என்பதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். தேவாரம் வனத் துறையினா் தீயை அணைக்கப் போராடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com