ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

உத்தமபாளையம்: ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள எல்லையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு மலைச் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுகிறது. இதைத் தடுப்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறைத் தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் ஆலோசனையின் படி, மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளா் விஜய காா்த்திக்ராஜா, துணை கண்காணிப்பாளா் ஜெகதீசன் ஆகியோரின் தலைமையில் போலீஸாா் கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும், 1800 - 599- 5950 என்ற கட்டணமில்லா கைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என சுவரொட்டி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com