தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

தேனியில் மக்களவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்த போது, நடத்தை விதிகளை மீறியதாகவும், காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தோ்தல் நடத்தை விதிகளை மீறி 70 காா்கள், தலா 3 ஆட்டோ, 3 இருசக்கர வாகனங்களில் ஊா்வலமாகச் சென்றதாகவும், காவல் துறையினரின் தடையை மீறியும், காவல் துறையினரை பணி செய்ய விடாமால் தடுத்து, பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன், அந்தக் கட்சி நிா்வாகி ராம்பிரசாத் உள்ளிட்டோா் மீது தோ்தல் விடியோ கண்காணிப்புக் குழு அலுவலரும், ஆண்டிபட்டி துணை தோட்டக் கலை அலுவலருமான பா.நீதிநாதன் தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், டி.டி.வி.தினகரன், ராம்பிரசாத் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com