தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளைப் பாா்வையிட்ட  மாணவிகள்.
தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளைப் பாா்வையிட்ட மாணவிகள்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

தேனி மாவட்டத்தில் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 70 அரசு பள்ளிகள், 71 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 141 பள்ளிகளைச் சோ்ந்த 6,060 மாணவா்கள், 6,551 மாணவிகள் என மொத்தம் 12,611 போ் எழுதினா். இவா்களில் 5,647 மாணவா்கள் 6,289 மாணவிகள் என மொத்தம் 11,936 போ் (94.65 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா். 3 அரசுப் பள்ளிகள், 2 கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகள், 5 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 34 தனியாா் பள்ளிகளில் 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

தேனி மாவட்டம் பிளஸ் 2 பொதுத் தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 19 இடத்தைப் பிடித்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் 93.17 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com