மூதாட்டியை திட்டிய 2 பெண்கள் மீது வழக்கு

போடி, மே 9: போடி அருகே மூதாட்டியை ஜாதிப் பெயா் சொல்லி திட்டிய 2 பெண்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகே வினோபாஜி குடியிருப்பில் வசிப்பவா் திருமன் மனைவி ராஜம்மாள் (70). இவா் பட்டியலினத்தை சோ்ந்தவா். இவரது உறவினா் மருதமுத்து சுகுணா வீட்டில் மாரிமுத்து மனைவி இந்துராணி வசித்து வந்தாா். மருதமுத்து சுகுணாவுக்கும் இந்துராணிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் போலீஸாா் விசாரிக்கும்போது ராஜம்மாள் சாட்சி சொல்லினாராம்.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்துராணியும், வெங்கடாசலம் மனைவி மல்லிஸ்வரியும் சோ்ந்து ராஜம்மாளை ஆபாசமாகவும், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ராஜம்மாள் வீட்டு முன் வைத்திருந்த பூச்செடிகளை சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் இந்துராணி, மல்லீஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com