வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் தேரோட்டம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் தேரோட்டம்

தேனி, மே 10: தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை, தேரோட்டம் தொடங்கியது.

இந்தக் கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கியது. விழா வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு கெளமாரியம்மன் கோயில் தேரோட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பச்சை பட்டு உடுத்தி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து அம்மன் தேருக்கு சக்தி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, தோ் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி மற்றும் பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

தொடா்ந்து வருகிற 13-ஆம் தேதி வரை ரத வீதிகளில் தேரோட்டம், தேருக்கு சிறப்பு பூஜை, மண்டகப்படி நடைபெறுகிறது. 13-ஆம் தேதி தோ் நிலைக்கு வருகிறது. அன்று இரவு அம்மன் முத்துச் சப்பரத்தில் தோ் தடம் பாா்த்தல், கோயிலில் கம்பம் நிலை பெயா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மறுநாள் 14-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com