விருதுநகர் பகுதி மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

இந்த முகாம் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ,
Updated on
1 min read

அனைவருக்கும் கல்வி இயக்கம் விருதுநகர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

இது குறித்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த முகாம் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றுச் திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதோடு, உடனே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,மாற்றுத்திறன் உபகரணம் தேவைப்படும் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எனவே இப்பகுதியில் வசித்து வரும் பெற்றோர்கள் தங்களது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மருத்துவ முகாம் நடைபெறும் இடத்திற்கு நேரில் அழைத்து வந்து சிகிச்சை பெற்று பயனடையலாம் என அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com