விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வத்திராயிருப்பில் 98 பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியத்தில்  புதியதாக 98 பள்ளி செல்லாக் குழந்தைகளும் 22 மாற்றுத் திறனுடைய குழந்தைகளும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளமைய

News image
Updated On :15 மே 2014, 12:36 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியத்தில்  புதியதாக 98 பள்ளி செல்லாக் குழந்தைகளும் 22 மாற்றுத் திறனுடைய குழந்தைகளும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளமைய மேற்பார்வையார் (பொறுப்பு) லி.மேரி சித்தா வியாழக்கிழமை கூறினார்.

அனைவருக்கும் கல்வி இயக்கும் சார்பில், வத்திராயிருப்பு வட்டார வளமையத்திற்குட்பட்ட 138 குடியிருப்புப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளியில் சேர்ந்து இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடையே குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி மே மாத இறுதிவரை நடைபெறும்.

இதுவரை 120 குடியிருப்புப் பகுதிகளில் வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டதில், 98 பள்ளி செல்லாக் குழந்தைகளும், 22 மாற்றுத் திறனுடைய குழந்தைகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூமாப்பட்டியில் வியாழக்கிழமை இப் பணி நடைபெற்றது. இப் பணிகளை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், உதவி திட்ட அலுவலர் மாடசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வத்திராயிருப்பு ஒன்றியத்தில் இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளை முழுமையாக வரும் கல்வியாண்டில் இணைப்புப் பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள் மற்றும் சாதாரண பள்ளிகளில் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,க வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து படிக்கிறார்கள் என்ற நிலையை ஏற்படுத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்பார்வையாளர் (பொறுப்பு) லி.மேரி சீத்தா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.