விருதுநகர் அருகே பயணச்சீட்டு எடுக்காததைக் கண்டித்த அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(19). இவர் சிவகாசியிலிருந்து-சாத்தூர் செல்லும் அரசு பேருந்தில் வியாழக்கிழமை ஏறி பயணம் செய்தாராம். அப்போது, சாத்தூர் அருகே வரும் போது திடீரென பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஏறி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டன் பயணச்சீட்டு எடுக்காதது தெரியவந்தது. உடனே அவரிடம் இருந்து ரூ.100 அபராத கட்டணம் வசூலித்துள்ளனர்.
இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து சாத்தூர் பேருந்து நிலையத்திற்கு சென்று அரசு பேருந்து திரும்பி படந்தால் அருகே வந்தது. அப்போது மணிகண்டன் மற்றும் அவரது நண்பரும் பேருந்தை நிறுத்தி உள்ளே சென்று ஓட்டுநர் பழனிபாண்டி(32), நடத்துநர் கருப்பசாமி(52) ஆகியோரை கண்டபடி பேசி கைகளால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக நடத்துநர் கருப்பசாமி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் படந்தால் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சவாலான பெல்ஜியம் கார் பந்தயத்தில் 2-ம் இடம்பிடித்து அசத்திய அஜித் குமார் அணி!

நீதிக் கதைகள்! கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம்!

பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

