நெல் பயிருக்கு காப்பீடு: வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டாரத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, வேளாண் அதிகாரி, விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டாரத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, வேளாண் அதிகாரி, விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளார்.
 இதுகுறித்து சாத்தூர் வேளாண் உதவி இயக்குநர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சாத்தூர் அருகே மேலமடை, கோசுக்குண்டு, நென்மேனி, பெரியகொல்லபட்டி, எம்.நாகலாபுரம், நள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களின் அருகாமையில் உள்ள தொடக்க
வேளாண்மை கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசியமயமாக்கபட்ட வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ, நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு பிரிமியத் தொகையாக ரூ.281-ஐ வரும் நவ. 30 ஆம் தேதிக்குள் பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
மேலும் அத்தொகையை செலுத்தும் போது ஆதார் நகல், சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு நகல் ஆகியவற்றுடன், பதிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com