சிலம்பு விரைவுரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டதால், செங்கோட்டை - மதுரை, மற்றும் திருநெல்வேலி பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வாரம் இருமுறை இயங்கும் சிலம்பு விரைவு ரயில் செங்கோட்டையில் மாலை 4 மணிக்குப் புறப்பட்டு 5.20க்கு ராஜபாளையம் வருகிறது. இதனால் பயணிகள் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து தற்போது மதுரைக்கு மாலை 3.50க்கு புறப்படும் பயணிகள் ரயில், மாலை 3.40க்கு புறப்படும். ராஜபாளையத்துக்கு 5 மணிக்கு வரும் இந்த ரயில் மதுரைக்கு, வழக்கமான நேரமான இரவு 7.35க்கு சென்றடையும்.
செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை, 3.30க்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், 3.20க்கு புறப்படும் என மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.